சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகமாக மழை கொட்டியும் நிரம்பாத மாநகராட்சி குளம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
மாதவரம் : ஸ்மார்ட் சிட்டி' திட்டம் வாயிலாக மாநகராட்சியால் துார் வாரப்பட்ட குளம், வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்தும், நிரம்பாமல் உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணை அருகே, 1 ஏக்கர் அளவில் மாநகராட்சி குளம் உள்ளது. இந்த குளம் 2019ம் ஆண்டு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 5 அடி ஆழத்திற்கு துார் வாரப்பட்டு, கரை மற்றும் கம்பி வேலி தடுப்பு

மாதவரம் : ஸ்மார்ட் சிட்டி' திட்டம் வாயிலாக மாநகராட்சியால் துார் வாரப்பட்ட குளம், வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்தும், நிரம்பாமல் உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணை அருகே, 1 ஏக்கர் அளவில் மாநகராட்சி குளம் உள்ளது. இந்த குளம் 2019ம் ஆண்டு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 5 அடி ஆழத்திற்கு துார் வாரப்பட்டு, கரை மற்றும் கம்பி வேலி தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால், மழைக் காலத்தில் சுற்றுவட்டாரங்களில் கிடைக்கும் நீர், குளத்திற்கு வருவதற்கான வரத்து கால்வாய் வசதி இல்லை.அருகில் உள்ள தோட்டக்கலை பூங்காவை ஒட்டிய பகுதியில் மட்டுமே, மழை நீர் வரத்துக்கான குழாய் அமைக்கப்பட்டது. அதனால், இந்தாண்டு பருவ மழை கூடுதலாக பெய்தும், போதிய பாரமரிப்பு மற்றும் நீர் வரத்து கால்வாய் வசதி இல்லாததால், விரைவாக நிரம்ப வேண்டிய இந்த குளம், நேற்று வரை ஓரளவு தண்ணீர் மட்டுமே நிரம்பி, குட்டையாக காட்சி அளிக்கிறது.

மேலும் இந்த குளத்திற்குள், அருகில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து, இறைச்சி கழிவு மற்றும் இளநீர் கூடு உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் தினமும் வீசப்படுகின்றன. இது தவிர, டெங்கு கொசு புழுக்களை உருவாக்கும் சேதமடைந்த பழைய பிரிஜ் ஆகியவற்றின் கழிவுகளும் வீசப்பட்டுள்ளன. இதனால், குளத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.ஆவின் பால்பண்ணை, தோட்டக்கலை பூங்கா, ஆவின் பாலகம் ஆகியவற்றின் அருகே, மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ள இடத்தின் நுழைவு வாசலில் உள்ள இந்த குளத்தை, மழை நீர் சேகரிப்புக்கு எடுத்துக்காட்டாக மாநகராட்சி உருவாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X