சட்டசபையை முற்றுகையிட்ட வவுச்சர் ஊழியர்கள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : முதல்வர் அறிவித்த ஊதிய உயர்வு உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தி பொதுப்பணித்துறை ஊழியர்கள், சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி பொதுப்பணித்துறையில், கடந்த 2014ம் ஆண்டு முதல், 1,311 பேர் வவுச்சர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.3,200 சம்பளம் வழங்கப்படுகிறது. முதல்வர் ரங்கசாமி, கடந்த செப்டம்பர் 1ம்
 சட்டசபையை முற்றுகையிட்ட வவுச்சர் ஊழியர்கள்

புதுச்சேரி : முதல்வர் அறிவித்த ஊதிய உயர்வு உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தி பொதுப்பணித்துறை ஊழியர்கள், சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது

.புதுச்சேரி பொதுப்பணித்துறையில், கடந்த 2014ம் ஆண்டு முதல், 1,311 பேர் வவுச்சர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.3,200 சம்பளம் வழங்கப்படுகிறது. முதல்வர் ரங்கசாமி, கடந்த செப்டம்பர் 1ம் தேதி சட்டசபையில் மானிய கோரிக்கைக்கு பதில் அளித்த போது, பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்களை, தினக்கூலி ஊழியர்களாக மாற்றி, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.10 ஆயிரம், கருவூலம் மூலம் வழங்கப்படும் என அறிவித்தார்.

முதல்வர் அறிவித்து மூன்று மாதமாகியும், அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அதிருப்தி அடைந்த வவுச்சர் ஊழியர்கள் 350 பேர், சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் நேற்று, முதல்வரை சந்திக்க காலை 10:30 மணிக்கு சட்டசபைக்கு வந்தனர். அவர்களை சபை காவலர்கள் உள்ளே விட மறுத்து, நுழைவு வாயில் கேட்டை பூட்டினர்.ஆத்திரமடைந்த ஊழியர்கள், சட்டசபையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். ஊதிய உயர்வு அறிவித்த முதல்வரை வாழ்த்தியும், அதற்கு அனுமதி அளிக்காமல் காலம் கடத்தும் தலைமைச் செயலரை கண்டித்தும், கடுமையாக விமர்சித்து கோஷமிட்டனர்.

தகவலறிந்து வந்த எஸ்.எஸ்.பி., லோகேஸ்வரன், எஸ்.பி., தீபிகா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வர் ரங்கசாமி சட்டசபைக்கு வராததால், முக்கிய நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசினர். முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தாத அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தியதாக தெரிவித்தனர்.அமைச்சர், உயர்த்தப்பட்ட சம்பளத்தை டிசம்பர் மாதம் கருவூலம் மூலம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். அதனையேற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X