பொது செய்தி

தமிழ்நாடு

'ஜல் ஜீவன்' திட்டப்பணி துவக்காமல் அலட்சியம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கம்பம்--கம்பம் ஒன்றியத்தில் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட பணிகள் டென்டர் எடுத்தவர்கள் துவங்காமல் அலட்சியமாக உள்ளனர்.அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மத்திய அரசின் 'ஜல்ஜீவன் மிஷன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்குதல், குடிநீர் ஆதாரங்களை வலுப்படுத்தப்படும். இத் திட்டத்திற்கு மத்திய அரசு ஊராட்சிகளுக்கு பல லட்ச

கம்பம்--கம்பம் ஒன்றியத்தில் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட பணிகள் டென்டர் எடுத்தவர்கள் துவங்காமல் அலட்சியமாக உள்ளனர்.அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மத்திய அரசின் 'ஜல்ஜீவன் மிஷன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்குதல், குடிநீர் ஆதாரங்களை வலுப்படுத்தப்படும். இத் திட்டத்திற்கு மத்திய அரசு ஊராட்சிகளுக்கு பல லட்ச நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்தவர்கள் பணிகளை துவக்குவதில் தாமதம் செய்கின்றனர். கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம் ஊராட்சிகளில் ஓராண்டை கடந்தும், இதுவரை பணி துவக்கவில்லை. பி.டி.ஓ., நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மத்திய அரசு நிதியை முறையாக பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பட, பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X