இந்தியா

புதுச்சேரியில் 4.3 சதவீத மாணவர்களிடம் புகையிலை பழக்கம்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் 4.3 சதவீத மாணவர்கள், புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி உள்ளது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலக இளைஞர்களிடம் புகையிலை பயன்பாடு குறித்த கணக்கெடுப்பில் புதுச்சேரி மாநிலம் பங்கேற்றது. இந்த ஆய்வு குறித்த தகவல் இதழ் வெளியீடு, புகையிலை நிறுவனங்களின் குறுக்கீடு சம்பந்தமான பயிலரங்கு ஓட்டல் அக்கார்டில் நேற்று நடந்தது.ஜிப்மர் பொது சுகாதார நோய் தடுப்பு
 புதுச்சேரியில் 4.3 சதவீத மாணவர்களிடம் புகையிலை பழக்கம்;    ஆய்வில் அதிர்ச்சி தகவல்


புதுச்சேரி : புதுச்சேரியில் 4.3 சதவீத மாணவர்கள், புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி உள்ளது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலக இளைஞர்களிடம் புகையிலை பயன்பாடு குறித்த கணக்கெடுப்பில் புதுச்சேரி மாநிலம் பங்கேற்றது. இந்த ஆய்வு குறித்த தகவல் இதழ் வெளியீடு, புகையிலை நிறுவனங்களின் குறுக்கீடு சம்பந்தமான பயிலரங்கு ஓட்டல் அக்கார்டில் நேற்று நடந்தது.

ஜிப்மர் பொது சுகாதார நோய் தடுப்பு துணை தலைவர் சித்தான்சு சேகர் கர் வரவேற்றார். மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். டாக்டர் சோனு கோயல், நோக்கவுரை ஆற்றினார். சுகாதாரத் துறை செயலர் உதயகுமார் சிறப்புரையாற்றினார். சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வாழ்த்தி பேசினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரங்கசாமி, கடந்த 2019ம் ஆண்டு உலக இளைஞர்களிடம் புகையிலை பயன்பாடு குறித்த கணக்கெடுப்பில் பங்கேற்ற புதுச்சேரி பற்றிய தகவல் இதழை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு, மாநில புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் சூரியகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆய்வில் அதிர்ச்சிபுதுச்சேரியில், கடந்த 2019ம் ஆண்டு 22 பள்ளிகளை சேர்ந்த 2,179 மாணவர்களிடம் கண்கெடுப்பு நடத்தப் பட்டது. இதில், 13 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்களில் 4.3 சதவீத பேர், புகைக்கும் அல்லது மெல்லும் வகை புகையிலையை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிய வந்துள்ளது. இது, தேசிய அளவான 8.5 சதவீதத்தை விட குறைவாகும். 2.8 சதவீத மாணவர்கள் புகைக்கும் புகையிலையையும், 1.4 சதவீத மாணவர்கள் மெல்லும் வகை புகையிலை பயன்படுத்துகின்றனர்.புகையில்லா வழிகாட்டி நெறிமுறைகளை புதுச்சேரியில் 63 சதவீத பள்ளிகள் பின்பற்றுகின்றன. புகைப்பவரின் அருகில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வீட்டில் 3 சதவீதம்; பொது இடங்களில் 42; திறந்த வெளியில் 37.8; பள்ளி அருகில் 17.9 சதவீதமாக உள்ளது என தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X