செருதோணி அணை மதகு அருகே மரத்தடிகள் அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செருதோணி அணை மதகு அருகே மரத்தடிகள் அகற்றம்

Added : நவ 25, 2021
Share
மூணாறு-இடுக்கி அணையின் ஒரு பகுதியான செருதோணி அணையின் மதகு அருகே அடித்து வரப்பட்ட மரத்தடிகளை தக்க சமயத்தில் அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இடுக்கி அணை ஆர்ச்' வடிவில் கட்டப்பட்டுள்ளதால், அதன் அருகில் நேர்வடிவில் கட்டப்பட்டுள்ள செருதோணி அணை திறக்கபடுவது வழக்கம். அதன்படி அணையில் திறக்கப்பட்ட ஒரு மதகை அடைப்பதற்கு நவ.20 இரவில் அதிகாரிகள் ஆயத்தமாகிக்

மூணாறு-இடுக்கி அணையின் ஒரு பகுதியான செருதோணி அணையின் மதகு அருகே அடித்து வரப்பட்ட மரத்தடிகளை தக்க சமயத்தில் அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இடுக்கி அணை ஆர்ச்' வடிவில் கட்டப்பட்டுள்ளதால், அதன் அருகில் நேர்வடிவில் கட்டப்பட்டுள்ள செருதோணி அணை திறக்கபடுவது வழக்கம். அதன்படி அணையில் திறக்கப்பட்ட ஒரு மதகை அடைப்பதற்கு நவ.20 இரவில் அதிகாரிகள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.அப்போது மதகில்இருந்து 300 மீ.,தொலைவில் பெரிய மரத்தடிகள் மிதந்ததை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கவனித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். கலெக்டர், மின்வாரிய தலைமை நிர்வாக இயக்குனர், அணை பாதுகாப்பு தலைமை பொறியாளர் அனுமதி பெற்று மதகு அடைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீயணைப்புதுறையினர் படகு மூலம் மரத்தடிகளைபாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்.உரிய நேரத்தில் மரத்தடிகளை அகற்றவில்லைஎன்றால், அவை மதகில் சிக்க வாய்ப்புள்ளது. அதனை அகற்ற மதகு மேலும் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், அதிக தண்ணீர் வெளியேறி சேதம் ஏற்பட்டிருக்கும். இது போன்ற சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சூர் பெருங்கல்குன்னில் நடந்ததாகவும்அதிகாரிகள் தெரிவித்தனர்.---------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X