சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எப்போதும் நீர் தேங்கும் தெரு

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை : தண்டையார்பேட்டை மண்டலம், ஐ.ஓ.சி., பவர் ஹவுஸ், அஜிஸ் நகர் இரண்டாவது தெருவில், ௧௦௦க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால், சாலையை சமமாக போடாததால், தெருவின் நடுப்பகுதியில் எப்போதும் தண்ணீர்தேங்கி நிற்கிறது.மழை நேரம் மட்டுமின்றி, எப்போதும் தண்ணீர் தேங்கி, அதில் கழிவு நீரும் கலப்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி

சென்னை : தண்டையார்பேட்டை மண்டலம், ஐ.ஓ.சி., பவர் ஹவுஸ், அஜிஸ் நகர் இரண்டாவது தெருவில், ௧௦௦க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த தெருவில் சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால், சாலையை சமமாக போடாததால், தெருவின் நடுப்பகுதியில் எப்போதும் தண்ணீர்தேங்கி நிற்கிறது.மழை நேரம் மட்டுமின்றி, எப்போதும் தண்ணீர் தேங்கி, அதில் கழிவு நீரும் கலப்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்கள் இரவில் துாங்க முடியாமல், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அடிக்கடி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். தெருவிலுள்ள பாதாள சாக்கடையும் உயரமாக இருப்பதால், தண்ணீர் வெளியேற வழியின்றி நிற்கிறது. சிமென்ட் சாலையாக இருப்பதால், வழி செய்தும் வெளியேற்ற முடிவதில்லை. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X