சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கி ரூ.3.54 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
தேனி-சின்னமனுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் டெபாசிட்டில் ரூ.3.54 லட்சம் முறை கேடு செய்த முன்னாள் மேலாளர் சேகர் 58 கைது செய்யப்பட்டார்.கம்பம் அருகே ஆங்கூர்பாளையம் டி.எஸ்.கே., நகர் சேகர், 2014 முதல் 2015 வரை மேலாளராக பணிபுரிந்தார். இவர், பணிகாலத்தில் டெபாசிட்டில் முறைகேடு செய்தது, துணைப் பதிவாளர் சலீம் விசாரணையில் தெரிந்தது. மதுரை மண்டல வணிக குற்றப் புலனாய்வு பிரிவு

தேனி-சின்னமனுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் டெபாசிட்டில் ரூ.3.54 லட்சம் முறை கேடு செய்த முன்னாள் மேலாளர் சேகர் 58 கைது செய்யப்பட்டார்.கம்பம் அருகே ஆங்கூர்பாளையம் டி.எஸ்.கே., நகர் சேகர், 2014 முதல் 2015 வரை மேலாளராக பணிபுரிந்தார். இவர், பணிகாலத்தில் டெபாசிட்டில் முறைகேடு செய்தது, துணைப் பதிவாளர் சலீம் விசாரணையில் தெரிந்தது. மதுரை மண்டல வணிக குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜநளாயிணி தலைமையில் விசாரணை செய்தனர். அதில் சேகர், வங்கியில் டெபாசிட் வைக்காதவர்களின் பெயரில் போலிகணக்கு துவங்கி, அதற்கு வட்டி வழங்கி ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 137 வங்கிக்கு இழப்பீடு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. சேகரை கைது செய்தனர். ஏற்கனவே இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X