சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரிவாளால் வாலிபரை வெட்டி பணம் பறித்தோருக்கு வலை

Added : நவ 25, 2021
Share
Advertisement
கொருக்குப்பேட்டை : கொருக்குப்பேட்டையில், பணம் கொடுக்க மறுத்த வாலிபரை அரிவாளால் வெட்டிய வழிப்பறி ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை கொருக்குப்பேட்டை, அன்பழகன் நகர், 5வது தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 50; ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று முன்தினம், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் பாலம் அருகே நடந்து சென்ற போது, மூன்று 'பைக்'கில் வந்த ஐந்து மர்ம நபர்கள்

கொருக்குப்பேட்டை : கொருக்குப்பேட்டையில், பணம் கொடுக்க மறுத்த வாலிபரை அரிவாளால் வெட்டிய வழிப்பறி ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை கொருக்குப்பேட்டை, அன்பழகன் நகர், 5வது தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 50;

ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று முன்தினம், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் பாலம் அருகே நடந்து சென்ற போது, மூன்று 'பைக்'கில் வந்த ஐந்து மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர். பின்னர், தேவேந்திரனை மிரட்டி பணம் மற்றும் மொபைல் போனை கேட்டுள்ளனர். அவற்றை தர மறுத்ததால், தேவேந்திரனை அந்த கும்பல் அரிவாளால் வெட்டி, 2,000 ரூபாய் பணம், விலை உயர்ந்த மொபைல் போனை பறித்துச் சென்றனர்.பலத்த காயமடைந்த தேவேந்திரனை, பொதுமக்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, ஆர்.கே., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X