பொது செய்தி

தமிழ்நாடு

விபத்து நஷ்டஈடு வழங்காததால்விழுப்புரத்தில் அரசு பஸ் 'ஜப்தி'

Added : நவ 25, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் விபத்து நஷ்டஈடு வழங்காத அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான புதுச்சேரி பஸ்சை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே திருப்பேர் தக்கா பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் பாலு, 20; இவரும், அப்பகுதியை சேர்ந்த விஜி,35; என்பவரும் 2015 ஜன., 15ம் தேதி, பைக்கில் திருப்பேர்தக்காவில் இருந்து

விழுப்புரம் : விழுப்புரத்தில் விபத்து நஷ்டஈடு வழங்காத அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான புதுச்சேரி பஸ்சை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே திருப்பேர் தக்கா பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் பாலு, 20; இவரும், அப்பகுதியை சேர்ந்த விஜி,35; என்பவரும் 2015 ஜன., 15ம் தேதி, பைக்கில் திருப்பேர்தக்காவில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி சென்றனர்.

அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ் மோதி, இருவரும் இறந்தனர்.உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்தனர். இது தொடர்பாக, நஷ்டஈடு வழங்க கோரி, பாலுவின் தந்தை வெங்கடேசன், தாய் காந்தி ஆகியோர் விழுப்புரம் மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இந்த மனு 2018 மார்ச் 16ம் தேதி, விசாரணைக்கு வந்தது. அப்போது, வெங்கடேசன் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக அரசு போக்குவரத்து கழகம் 8 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், நஷ்ட ஈடு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்காமல் காலம் தாழ்த்தியதால், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் மணிராஜ் நிறைவேற்று மனுதாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) பூர்ணிமா, பாதிக்கபட்ட வெங்கடேசன் குடும்பத்திற்கு, அரசு போக்குவரத்து கழகம் வட்டியோடு சேர்த்து 13 லட்சத்து 70 ஆயிரத்து 406 ரூபாய் வழங்க வேண்டும்.

இந்த தொகையை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வழங்கவில்லை என்றால், அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என கடந்த 20ம் தேதி உத்தரவிட்டார்.இதையடுத்து நஷ்டஈடு தொகை வழங்காததால் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் புதுச்சேரிக்கு புறப்பட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்சை, முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் ஞானவேல் ஜப்தி செய்தார். அந்த பஸ் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X