தமிழ்நாடு

பழைய சென்ட்ரல் மார்க்கெட் கடைகளுக்கு ஏலம் நடத்த தடையில்லை: முடிவை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021
Share
Advertisement
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கடைக்காரர்கள் சங்க தலைவர் ராஜூநாகுலு தாக்கல் செய்த மனு: கோயில் வளாகத்தில் பாரம்பரியமாக கடைகள் நடத்துகிறோம். கிழக்கு கோபுர பகுதியில் 2018ல் தீ விபத்து ஏற்பட்டது. சில கடைகள் சேதமடைந்தன. கடைகளை காலி செய்யும் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.கோயில் வளாகத்தில் கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க கோரினோம். மாற்று இடம் இல்லை என கோயில்
பழைய சென்ட்ரல் மார்க்கெட்  கடைகளுக்கு ஏலம் நடத்த தடையில்லை: முடிவை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கடைக்காரர்கள் சங்க தலைவர் ராஜூநாகுலு தாக்கல் செய்த மனு: கோயில் வளாகத்தில் பாரம்பரியமாக கடைகள் நடத்துகிறோம்.

கிழக்கு கோபுர பகுதியில் 2018ல் தீ விபத்து ஏற்பட்டது. சில கடைகள் சேதமடைந்தன. கடைகளை காலி செய்யும் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.கோயில் வளாகத்தில் கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க கோரினோம். மாற்று இடம் இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில் பணி முடிந்த பின் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக 2020 ல் மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

அங்கு கடைகள் ஒதுக்கீட்டிற்கு நவ.,10 ல் மாநகராட்சி ஏல அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.பழைய சென்ட்ரல் மார்க்கெட் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் கடைகள் ஒதுக்கீட்டில் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். மாநகராட்சி தரப்பு: கோயில் கடைக்காரர்களுக்கும் மாநகராட்சிக்கும் சம்பந்தமில்லை. அவர்கள் கடைகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை கோர முடியாது என தெரிவித்தது.நீதிபதி: ஏலம் நடத்தலாம். அதன் முடிவை வெளியிடக்கூடாது. ஏலத்தில் மனுதாரர் சங்கத்தினர் பங்கேற்கலாம். விசாரணை நவ.,29 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X