பொது செய்தி

தமிழ்நாடு

கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குள நிலை : உயர்நீதிமன்றம் அதிருப்தி

Added : நவ 25, 2021
Share
Advertisement
மதுரை-மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது. மதுரை சின்ன அனுப்பானடி உதயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: இக்கோயில் தெப்பக்குளம் டவுன்ஹால் ரோட்டில் உள்ளது. அதன் கலைத் தோற்றத்தை மறைக்கும் வகையில் நான்கு புறமும் வணிக நோக்கில் கட்டுமானங்கள் உள்ளன. நீர் வழித்தடம் சேதமடைந்துள்ளது. தெப்பக்குளத்தில் குப்பை

மதுரை-மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது.

மதுரை சின்ன அனுப்பானடி உதயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: இக்கோயில் தெப்பக்குளம் டவுன்ஹால் ரோட்டில் உள்ளது. அதன் கலைத் தோற்றத்தை மறைக்கும் வகையில் நான்கு புறமும் வணிக நோக்கில் கட்டுமானங்கள் உள்ளன. நீர் வழித்தடம் சேதமடைந்துள்ளது. தெப்பக்குளத்தில் குப்பை குவிக்கப்படுகிறது. கழிவு நீர் கலக்கிறது. தெப்பக்குளம் மாசடைகிறது. இவ்விவகாரத்தை உயர்நீதிமன்றம் 2011 ல் தானாக முன்வந்து விசாரித்து உத்தரவிட்டதன்பேரில் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின் மேல்நடவடிக்கை இல்லை. ஒரு பகுதியில் 2019ல் சில கடைகள் அகற்றப்பட்டன. அதன்பின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை. தெப்பக்குளத்தின் கலைநயத்தை மறைக்கும் கட்டுமானங்களை அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். குப்பை குவிப்பது, கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். தெப்பக்குளத்தை பழைய நிலைக்கு கொண்டுவந்து பராமரிக்க அறநிலையத்துறை கமிஷனர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பு: கடைகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக சில கடைக்காரர்கள் அறநிலையத்துறையிடம் சீராய்வு மனு செய்துள்ளனர். அது நிலுவையில் உள்ளது என தெரிவித்தது. மனுதாரர் தாக்கல் செய்த போட்டோ ஆதாரங்களை பார்த்த நீதிபதிகள், தெப்பக்குளத்தை கோயில் நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை என்பது தெளிவாகிறது என அதிருப்தி வெளியிட்டனர். சுத்தப்படுத்த அறிவுறுத்தி டிச.,1க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X