சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுவண்ணாரப்பேட்டையில் மக்கள் திடீர் மறியல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுவண்ணாரப்பேட்டை, : புது வண்ணாரப்பேட்டையில் கழிவு நீரை அகற்ற கோரி, பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.சென்னை, புதுவண்ணாரப்பேட்டை மங்கம்மாள் தோட்டம் பிரதான தெரு, அருணாச்சலேஸ்வரர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர்.சமீபத்தில் தொடர்ந்து பெய்ந்த கனமழையால், இப்பகுதி சாலைகளில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம்

புதுவண்ணாரப்பேட்டை, : புது வண்ணாரப்பேட்டையில் கழிவு நீரை அகற்ற கோரி, பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.சென்னை, புதுவண்ணாரப்பேட்டை மங்கம்மாள் தோட்டம் பிரதான தெரு, அருணாச்சலேஸ்வரர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில்,

ஆயிரக்கணக்கான வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர்.சமீபத்தில் தொடர்ந்து பெய்ந்த கனமழையால், இப்பகுதி சாலைகளில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம் வீசியது.இந்த நீரை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஏ.இ.,கோவில் சாலையில் நேற்று, திடீரென மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், பொதுமக்களிடம் சமரசம் பேசிய பின், போராட்டத்தை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X