சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சின்னசேலம் அருகே லஞ்சம் வாங்கியசர்வேயர், கிராம உதவியாளர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் அருகே ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த நயினார்பாளையம், வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஜெயராமன்,36. இவருடைய தந்தை கிருஷ்ணனுக்கு சொந்தமான நிலத்தை, தனது மகன்களான ஜெயராமன், ஏழுமலை மற்றும் நல்லதம்பி ஆகியோருக்கு பாகம்
 சின்னசேலம் அருகே லஞ்சம் வாங்கியசர்வேயர், கிராம உதவியாளர் கைது

சின்னசேலம் : சின்னசேலம் அருகே ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த நயினார்பாளையம், வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஜெயராமன்,36. இவருடைய தந்தை கிருஷ்ணனுக்கு சொந்தமான நிலத்தை, தனது மகன்களான ஜெயராமன், ஏழுமலை மற்றும் நல்லதம்பி ஆகியோருக்கு பாகம் பிரித்து, பட்டா மாற்றம் செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுபாக்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பாகப்பிரிவினை செய்துள்ளனர்

.இதனையடுத்து பட்டா மாற்றம் செய்ய இணைய வழியில் கட்டணம் செலுத்தி, ரசீதினை பெற்றுள்ளனர். ஆனால் நிலம் அளப்பதற்கு யாரும் வராததால் ஜெயராமன் மீண்டும், நயினார்பாளையம் குறுவட்டத்திற்கு உட்பட்ட சர்வேயரான சூர்யாவை அனுகி பட்டா மாற்றம் செய்ய கூறியுள்ளார்.சர்வேயர் சூர்யா நிலத்தை அளந்து தர, நபர் ஒன்றுக்கு 8 ஆயிரம் வீதம், ரூ.24 ஆயிரத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத ஜெயராமன், இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயராமனிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று மாலை 5 மணியளவில், நயினார்பாளையம் கிராமத்தில், நில அளவையின் போது ஜெயராமன் கொடுத்த ரூபாயை சர்வேயர் சூர்யா, 28; மற்றும் கிராம உதவியாளர் சுசீலா, 35; ஆகியோர் வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.இது குறித்து வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X