சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில்களை குறிவைத்து கைவரிசை

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கோவில் உண்டியல்களை உடைத்து திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த அந்தோணியார்புரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி, சப் இன்ஸ்பெக்டர் சுபிக் ஷா, குற்றப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜா, செல்வபாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சாலையில் சந்தேகப்படும்படி நின்றிருந்த

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கோவில் உண்டியல்களை உடைத்து திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த அந்தோணியார்புரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி, சப் இன்ஸ்பெக்டர் சுபிக் ஷா, குற்றப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜா, செல்வபாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது சாலையில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை விசாரித்தனர்.அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். தொடர்ந்து விசாரித்ததில் அரியலுார் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்த முத்துசேர்வா மடம் பகுதியைச்சேர்ந்த ஓகை குமார்,60: புதுச்சேரி திலாஸ்பேட்டை சண்முகாபுரத்தைச்சேர்ந்த மவுலி, 24; என்பதும் தெரியவந்தது.இவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நாச்சியார்பேட்டை ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில், வலசக்காடு வீரனார் கோவில் ஆகிய கோவில்களின் உண்டியல்களை உடைத்து திருடியது தெரியவந்தது.

இவர்களுக்கு புதுச்சேரி, கடலுார் , கும்பகோணம், உள்ளிட்ட பல கோவில்களில் நடந்த திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.போலீசார் இருவரையும் கைது செய்து, உருக்கிய நிலையில் இருந்த 4 கிராம் தங்கம் மற்றும் 700 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X