பொது செய்தி

தமிழ்நாடு

வெற்றிலை பயிரில் வாடல் நோய் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி--சோழவந்தான் பகுதியில்தட்பவெப்ப மாறுதலால் வெற்றிலை பயிர்களில் ஏற்பட்ட வாடல் நோயை கட்டுப்படுத்தலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் சரவணப்பிரியா தெரிவித்துள்ளார்.இப்பகுதியில் 50 ஏக்கருக்கும் அதிகமாக வெற்றிலை பயிரிடப்பட்டுள்ளது. தற்போதைய சீதோஷண நிலையால் அழுகல் மற்றும் வாடல் நோயால் வெற்றிலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.உதவி இயக்குனர் கூறியதாவது: வேர்

வாடிப்பட்டி--சோழவந்தான் பகுதியில்தட்பவெப்ப மாறுதலால் வெற்றிலை பயிர்களில் ஏற்பட்ட வாடல் நோயை கட்டுப்படுத்தலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் சரவணப்பிரியா தெரிவித்துள்ளார்.இப்பகுதியில் 50 ஏக்கருக்கும் அதிகமாக வெற்றிலை பயிரிடப்பட்டுள்ளது. தற்போதைய சீதோஷண நிலையால் அழுகல் மற்றும் வாடல் நோயால் வெற்றிலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.உதவி இயக்குனர் கூறியதாவது: வேர் அழுகல் நோய் ஏற்பட்டால் வெற்றிலை கொடிக்கால் நடவு செய்யும்போது நோய் தாக்காத கொடிகளில் இருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும். விதை கொடிகளை நடும் முன் போர்டோ மருந்துக்கலவையில் 5 நிமிடம் ஊற வைத்து நடலாம். நோய் தாக்குதல் காலமான அக்., முதல் பிப்., வரை ஒவ்வொரு மாதமும் காப்பர் ஆக்ஸி குளோரைடு 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து பட்டங்களின் இரு வரிசைகளுக்கு இடைவெளியில் வேர் நனையும்படி மண்ணில் ஊற்றவேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோ டெர்மா விரிடியை மக்கிய தொழு உரம் 100 கிலோ மற்றும் 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் நன்றாக கலந்து மூன்று மாதங்கள் இடைவெளியில் கொடியை சுற்றி இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு நிழலில் உலர்த்திய எருக்கந்தலை அல்லது வேப்ப இலைகளை 1.5 டன் அளவில் இடவேண்டும்.இலைக்கருகல், கருந்தாள் நோய் தோன்றியவுடன் 15 நாட்களுக்கு ஒரு முறை காப்பர் ஆக்சி குளோரைடு 2.5 கிராம் மற்றும் ஸ்ட்ரெப்டோசைக்கிளின் 0.5 கிராம் கலந்து தெளிக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X