பொது செய்தி

தமிழ்நாடு

பழுதான ரோடுகள் ஒரு மாதத்திற்குள் சீரமைப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
மதுரை--மதுரை நகரில் பருவமழையினால் பழுதான சாலைகள் ஒரு மாதத்திற்குஉள்ளாக சீரமைக்கப்படும் என மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் மூர்த்தி பேசினார்.ஆனையூர், திருவாதவூர்,உச்சப்பட்டியிலுள்ள 1712 குடும்பங்களை சார்ந்த 5505 பேருக்கு ரூ.86 லட்சத்து 57 ஆயிரத்து 696 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர்கள்

மதுரை--மதுரை நகரில் பருவமழையினால் பழுதான சாலைகள் ஒரு மாதத்திற்குஉள்ளாக சீரமைக்கப்படும் என மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் மூர்த்தி பேசினார்.ஆனையூர், திருவாதவூர்,உச்சப்பட்டியிலுள்ள 1712 குடும்பங்களை சார்ந்த 5505 பேருக்கு ரூ.86 லட்சத்து 57 ஆயிரத்து 696 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் வழங்கினர்.அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: இலங்கை தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார். பத்தாண்டு கால போராட்டத்திற்கு பிறகு இப்பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கிறது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மழையால் சேதமுற்ற ரோடுகளை சீரமைக்க ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.எம்.எல்.ஏ., வெங்கடேசன், கலெக்டர் அனீஷ்சேகர், டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, ஆர்.டி.ஓ., சுகி பிரேமலா, தாசில்தார் மாரிமுத்து, மறுவாழ்வு முகாம் தாசில்தார் கதிர்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X