போலீஸ் செய்திகள்....

Added : நவ 25, 2021
Share
Advertisement
இன்சூரன்ஸ் தாமதத்தால் தற்கொலைசிந்துபட்டி: அம்பட்டையன்பட்டி தங்கராமன் 35. இவரது காருக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துஉள்ளார். இதனிடையே கார் விபத்துக்குள்ளானது. இழப்பீடுகோரி விண்ணப்பித்து 5 மாதங்களுக்கு மேலாகியும் கிடைக்கவில்லை. இதனால் மனஅழுத்தத்திற்குஉள்ளானவர், இன்சூரன்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அலைபேசியில் அதை

இன்சூரன்ஸ் தாமதத்தால் தற்கொலைசிந்துபட்டி: அம்பட்டையன்பட்டி தங்கராமன் 35. இவரது காருக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துஉள்ளார். இதனிடையே கார் விபத்துக்குள்ளானது. இழப்பீடுகோரி விண்ணப்பித்து 5 மாதங்களுக்கு மேலாகியும் கிடைக்கவில்லை. இதனால் மனஅழுத்தத்திற்குஉள்ளானவர், இன்சூரன்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அலைபேசியில் அதை வீடியோவாக பதிவு செய்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அவரதுஉடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று மதியம் 3:00 மணிக்கு 10 நிமிடம் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமாதானம் செய்தனர்.மூதாட்டியிடம் செயின் பறிப்புவிக்கிரமங்கலம் : நரியம்பட்டி கருப்பாயி 60, நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் துாங்கிய போது மர்ம நபர் கழுத்திலிருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றார். கருப்பாயி சுதாரித்து தடுக்க முயன்ற போது இரண்டரை பவுன் செயினை பறித்து தப்பினார். போலீசார் தேடுகின்றனர்.டூவீலர்கள் மோதல்: 4 பேர் படுகாயம்வாடிப்பட்டி: மதுரை நகர் ஆயுதப்படை எஸ்.ஐ., தெய்வேந்திரன், போலீஸ் ஜெயலட்சுமி மகன் தியானேஷ்வரன் 19. இவரது நண்பர் போடி தேசபுனிதன் 19. இருவரும் வாடிப்பட்டி பாராமெடிக்கல் கல்லுாரி மாணவர்கள். நேற்று மாலை இருவரும் டூவீலரில் மதுரை சென்றனர். வாடிப்பட்டி பழைய நீதிமன்றம் எதிரே எதிர் திசையில் வந்த டூவீலர் (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) மீது மோதினர். இதில் அவர்கள் இருவரும், போடிநாயக்கன்பட்டி சந்திரன் 62, விருதுநகர் ராமு ஆகியோரும் பலத்த காயமுற்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.'ஓசி' சிகரெட் தகராறு: ஒருவர் கைதுசோழவந்தான்: இப்பகுதி சப்பாணி கோவில் தெரு நாகூர்கனி மனைவி ஆமீனம்மாள் 35. பலசரக்கு கடை வைத்துள்ளார். நேற்று மாலை கடைக்கு வந்தஅதேபகுதி சக்திவேல் 30, 'ஓசி' சிகரெட் கேட்டு மிரட்டியதோடு பொருட்களை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்தார். அவரை எஸ்.ஐ., ராஜேந்திரன் கைது செய்தார்.பேட்டரி மின்சாரம் தாக்கி வாலிபர் பலிவாடிப்பட்டி: ராமநாயக்கன்பட்டி செல்லையா மகன் ரஞ்சித்குமார் 27. நண்பர்களுடன் சேர்ந்து வாடிப்பட்டி சர்ச் அருகே நேற்று தள்ளுவண்டியில் பாஸ்ட்புட் கடை துவங்க இருந்தார். நேற்று மாலை நண்பர் வீட்டில் பொருட்களை ஏற்றியபோது தள்ளுவண்டியில் இருந்த பேட்டரி மின்சாரம் தாக்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X