பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி நிர்வாகம் குறித்த மூன்று மாத படிப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
மதுரை,--ஊரக வளர்ச்சி அமைப்புகள் குறித்த விவரங்கள், ஊராட்சி நிர்வாகம், நிதி மேலாண்மை, வளர்ச்சி திட்டங்கள் தயாரித்தல், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள், கிராம ஊராட்சியில் செயல்படுத்தபடும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி திட்டங்கள் என்ற மூன்று மாத சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது.தமிழக அரசின் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி

மதுரை,--ஊரக வளர்ச்சி அமைப்புகள் குறித்த விவரங்கள், ஊராட்சி நிர்வாகம், நிதி மேலாண்மை, வளர்ச்சி திட்டங்கள் தயாரித்தல், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள், கிராம ஊராட்சியில் செயல்படுத்தபடும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி திட்டங்கள் என்ற மூன்று மாத சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது.தமிழக அரசின் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் மூலம் நடத்தப்படும் இப்படிப்பில் மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், களப்பணியாளர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கிராம தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவி குழுவினர் கலந்து கொள்ளலாம். ஊரக ஊராட்சி நிர்வாகம், பல்வேறு மாநில மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள், ஊராட்சிகள்மற்றும் தனிநபர்கள் பயனடையும் வகையில் பல்வேறு துறைகளின் திட்டங்கள் கற்று தரப்படும்.பயிற்சியில் சேர ரூ.2500. the director, SIRD & PR, maraimalainagar என்ற பெயரில் வங்கி வரைவோலையுடன் விண்ணப்பங்களை உதவி இயக்குனர்(ஊராட்சி), கலெக்டர் அலுவலகம், மதுரை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு 90925 25097ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X