பொது செய்தி

இந்தியா

எதிரி சொத்துக்கள் விற்பனை; ரூ.1 லட்சம் கோடி கிடைக்கும்

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி-எதிரி சொத்துக்கள் விற்பனை செய்வது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க புதிய உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைந்துள்ளது. இதன் வாயிலாக, 1 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும்.நாடு சுதந்திரம் அடைந்தபோது ஏற்பட்ட பிரிவினையின்போது பலர் பாக்.,க்கு சென்று அங்கு குடியுரிமை பெற்றனர். அதேபோல், 1962ல் நடந்த போருக்குப் பிறகு சிலர், சீனாவுக்கு சென்று குடியேறினார்.இவ்வாறு

புதுடில்லி-எதிரி சொத்துக்கள் விற்பனை செய்வது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க புதிய உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைந்துள்ளது. இதன் வாயிலாக, 1 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும்.



latest tamil news


நாடு சுதந்திரம் அடைந்தபோது ஏற்பட்ட பிரிவினையின்போது பலர் பாக்.,க்கு சென்று அங்கு குடியுரிமை பெற்றனர். அதேபோல், 1962ல் நடந்த போருக்குப் பிறகு சிலர், சீனாவுக்கு சென்று குடியேறினார்.இவ்வாறு அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள், எதிரி சொத்து என, அழைக்கப்படுகின்றன. நாடு முழுதும் இவ்வாறு, 12,600 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில், 6,255 சொத்துக்களும், மேற்கு வங்கத்தில், 4,088 சொத்துக்களும் உள்ளன.இந்த சொத்துக்களை முறை யாக விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம், அரசுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news


இந்த சொத்துக்கள் விற்பனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க, மத்திய அரசு புதிய உயர்நிலை குழுவை அமைத்துள்ளது. மத்திய உள்துறையின் கூடுதல் செயலர் அந்தஸ்தில் உள்ளவர், இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார். பல்வேறு துறைகளில் பணியாற்றும் உயரதிகாரிகள் ஐந்து பேர் குழுவின் உறுப்பினர்களாகவும், ஒருவர் உறுப்பினர் - செயலராகவும் நியமிக்கப்படுவர்.இக் குழு விரைவில் அமைக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivan - seyyur,இந்தியா
25-நவ-202116:37:31 IST Report Abuse
sivan தமிழ்நாட்டில் .. சென்னையில் இந்த பிரச்சினைக்குரிய இஸ்லாமிய அமைப்பு இருக்கும் இடம் எதிரி சொத்துதானாம்
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
25-நவ-202116:15:52 IST Report Abuse
Suppan பெரிய பெரிய பங்களாக்களை வைத்துக் கொண்டு அரசு என்ன செய்யும் . வெட்டி வேலை? அவை ஒன்றும் புராதனச் சின்னங்கள் அல்ல. . உதாரணம்: அந்த நாட்டைக் கெடுத்த ஜின்னாவின் பங்களாவை ஏலம் விடுவதே சரி. சில காங்கிரஸ்காரர்கள் கூப்பாடு போடுவார்கள். செய்யட்டும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-நவ-202115:37:17 IST Report Abuse
Kasimani Baskaran சந்தை விலைக்கு விற்றால் ஐந்து மடங்காவது கிடைக்கும். தேச விரோதிகள் நீதிமன்றம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். காங்கிரஸ் தேசவிரோதக்காரியங்கள் செய்ய உபயோகப்படுத்தப்படும் அந்த ஹெரால்டு ஹவுசையும் விற்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X