சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமூக வல்லுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டிவட்டாரத்தில் தொழில்சார் சமூக வல்லுனராக பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்குமாறு அணித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட, வட்டார அணித்தலைவர் பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு;விக்கிரவாண்டி ஒன்றிய ஊராட்சிகளில் நிறுவன செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், தனி நபர் மற்றும் கூட்டு நிறுவனங்களை வலுப்படுத்துதல்,

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டிவட்டாரத்தில் தொழில்சார் சமூக வல்லுனராக பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்குமாறு அணித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட, வட்டார அணித்தலைவர் பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு;விக்கிரவாண்டி ஒன்றிய ஊராட்சிகளில் நிறுவன செயல்பாடுகளை

ஒருங்கிணைத்தல், தனி நபர் மற்றும் கூட்டு நிறுவனங்களை வலுப்படுத்துதல், மேம்படுத்துதல் பணிக்கு ஊராட்சிக்கு ஒரு நபர் வீதம் கீழ்கண்ட தகுதிகள் உடைய நபர்களிடமிருந்து தொழில்சார் சமூக வல்லுனர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பட்டப்படிப்பு படித்து, உள்ளூரை சேர்ந்த,மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பில் வங்கியல், சமூக பணி, வணிகவியல், வேளாண்மை, வணிக நிர்வாகம், கால்நடை அறிவியல் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆன்டிராய்டு செல் போன் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு செல் 9600881620 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் . விண்ணப்பங்கள் 30.11.2021 அன்று மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X