தமிழ்நாடு

வணிகவரி அலுவலர்கள் போராட்டம் வரி வசூல் பணிகள் பாதிப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பணியிட மாற்றத்தை கண்டித்து, வணிகவரி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வரி வசூலிக்கும் பணிகள் பாதித்தது.மாநில வரி அலுவலர்கள் 70 பேர், துணை மாநில வரி அலுவலர்கள் 30 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த பணியிட மாற்றத்தை கண்டித்து, வணிகவரி சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது.வணிகவரி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பணியிட மாற்றத்தை கண்டித்து, வணிகவரி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வரி வசூலிக்கும் பணிகள் பாதித்தது.மாநில வரி அலுவலர்கள் 70 பேர், துணை மாநில வரி அலுவலர்கள் 30 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த பணியிட மாற்றத்தை கண்டித்து, வணிகவரி சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது.வணிகவரி விதிகளுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள பணியிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் வேலைநிறுத்தம் செய்யப்படும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 2 துணை வணிகவரி ஆணையர் அலுவலகங்கள், 2 உதவி ஆணையர் அலுவலகங்கள், 4 வணிகவரி அலுவலகங்களில் பணியாற்றும் தலைமை அலுவலர்கள் முதல் ஊழியர்கள் வரை பணிக்கு செல்லாமல் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், 80 சதவீதம் பேர் பங்கேற்றனர். ஒரு சில அலுவலர்கள் மட்டுமே பணிக்கு சென்றனர். பல அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், மாவட்டத்தில் வணிகவரி வசூலிக்கும் பணிகள் பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X