தமிழ்நாடு

கிண்டியில் மீண்டும் துவங்கியது ரயில் நிலைய நடைமேம்பால பணி

Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கிண்டி ரயில் நிலைய நடைமேம்பால பணி, ஆறு மாதங்களுக்கு பின் மீண்டும் துவங்கியது.கிண்டி ரயில் நிலையத்தில், தற்போது உள்ள பழைய நடைமேம்பாலத்திற்கு அருகில் ஒன்று மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் - ரேஸ்கோர்ஸ் சாலை வரை ஒன்று என, இரண்டு நடைமேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு, 2020 ஜனவரியில் பணிகள் துவக்கப்பட்டன.கொரோனா தாக்கம் காரணமாக, இருமுறை பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் கிண்டி
 கிண்டியில் மீண்டும் துவங்கியது ரயில் நிலைய நடைமேம்பால பணி



கிண்டி ரயில் நிலைய நடைமேம்பால பணி, ஆறு மாதங்களுக்கு பின் மீண்டும் துவங்கியது.கிண்டி ரயில் நிலையத்தில், தற்போது உள்ள பழைய நடைமேம்பாலத்திற்கு அருகில் ஒன்று மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் - ரேஸ்கோர்ஸ் சாலை வரை ஒன்று என, இரண்டு நடைமேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு, 2020 ஜனவரியில் பணிகள் துவக்கப்பட்டன.

கொரோனா தாக்கம் காரணமாக, இருமுறை பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் கிண்டி ரயில் நிலையத்தில் மேம்பால கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகின்றன.இப்பாலப்பணி குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நடைமேம்பால பணி நடைமேடை ஒன்றில் இருந்து நான்காவது நடைமேடை வரை, தரைமட்டத்துடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள சிமென்ட் துாண்கள் மீது, இரும்பு துாண்கள் நிறுவப்பட்டு,

அதன் மீது நடைமேம்பாலம் கட்டப்பட உள்ளது.மேம்பால படிக்கட்டுகள், தற்போது பயன்பாட்டில் உள்ள நடைமேம்பால படிக்கட்டு பகுதியில் வருவதால், படிக்கட்டு வடிவமைப்பு மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. அதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இப்பால பணி, 2022 செப்டம்பருக்குள் முடிக்கப்படும். இதன்பின், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, ரேஸ்கோர்ஸ் பஸ் நிறுத்தம் வரையான நடைமேம்பாலம் கட்டப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
25-நவ-202109:19:02 IST Report Abuse
rajan ரொம்ப சுறுசுறுப்புதான். நீங்கள் எல்லாம் மும்பைல போய் பயிற்சி எடுத்து வாங்க. ரயில்வே பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவாகச் செய்கிறார்கள். அவர்களுடைய வேகத்துக்கு முன்னாடி நீங்க எல்லாம் ஜீரேர. தாம்பரம் செங்கல்பட்டு 28 கிலோ மீட்டர் 3வது மீட்டர்கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்ற 15 வருடங்களாக போராடுகிறீகள். பாம்பேயில் இரண்டே வருடங்களில் 40 கிலோமீட்டர் பாதை அமைத்து ரயிலும் விடுவாங்க. உங்கள மாதிரி ஒரு சோம்பேறிக் கூட்டம் அதுவும் தாம்பரம் டிவிஷன் எங்கேயும் கிடையாது. மாம்பலத்தில் கட்டப்படும் SkyWALK வெறும் 200 மீட்டர் நீளம் இரண்டு வருடமாக நடைபெற்று வருகிறது. கொரோன கால கட்டத்தில் சுலபமாக முடித்திருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X