சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் பல்லாவரத்தில் இருவர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
பல்லாவரம் : பல்லாவரம், பழைய டிரங்க் சாலை வழியாக, நேற்று முன்தினம் லோடு ஆட்டோ ஒன்று சென்றது. அந்த ஆட்டோவில் இருந்து, ரேஷன் அரிசி கொட்டியது. இதை பார்த்து சந்தேகமடைந்த பல்லாவரம் ரோந்து போலீசார், அந்த வாகனத்தை மடக்கி சோதனை நடத்தினர்.அப்போது, ஆலந்துாரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் இருந்து, 40 மூட்டை அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேஷன் கடையின்

பல்லாவரம் : பல்லாவரம், பழைய டிரங்க் சாலை வழியாக, நேற்று முன்தினம் லோடு ஆட்டோ ஒன்று சென்றது. அந்த ஆட்டோவில் இருந்து, ரேஷன் அரிசி கொட்டியது. இதை பார்த்து சந்தேகமடைந்த பல்லாவரம் ரோந்து போலீசார், அந்த வாகனத்தை மடக்கி சோதனை நடத்தினர்.

அப்போது, ஆலந்துாரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் இருந்து, 40 மூட்டை அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேஷன் கடையின் தற்காலிக ஊழியரான, குரோம்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார், 37 மற்றும் ராஜலிங்கம், 31, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லோடு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின், கைது செய்யப்பட்ட இருவரும், உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X