பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் படிக்கட்டில் பயணம் மாணவர்களுக்கு அறிவுரை

Added : நவ 25, 2021
Share
Advertisement
விழுப்புரம் : தினமலர் செய்தி எதிரொலியால், பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு கலெக்டர் மற்றும் போலீசார் அறிவுரை வழங்கினர்.விழுப்புரம் நகரில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி, பயணம் செய்கின்றனர். இதனால், மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும், என தினமலர் நாளிதழில் நேற்று
 பஸ் படிக்கட்டில் பயணம்  மாணவர்களுக்கு அறிவுரை

விழுப்புரம் : தினமலர் செய்தி எதிரொலியால், பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு கலெக்டர் மற்றும் போலீசார் அறிவுரை வழங்கினர்.விழுப்புரம் நகரில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி, பயணம் செய்கின்றனர்.

இதனால், மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும், என தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, திருக்கோவிலுாரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ்சில் முகையூரில் கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.அப்போது, படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதேபோன்று, எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் மாணவர்களுக்கும், நடத்துனர்களுக்கும் அறிவுரைகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X