சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழுதடைந்த குடிநீர் குழாய் செம்மஞ்சேரியில் சீரமைப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
செம்மஞ்சேரி : செம்மஞ்சேரியில், இரண்டு மாதங்களாக பழுதடைந்த குடிநீர் குழாய்களை, வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், பல நாட்களுக்கு பின் குடிநீர் வினியோகம் சீராகும் என்பதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜவகர்நகர், எழில்முக நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நடவடிக்கைஇங்கு,

செம்மஞ்சேரி : செம்மஞ்சேரியில், இரண்டு மாதங்களாக பழுதடைந்த குடிநீர் குழாய்களை, வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், பல நாட்களுக்கு பின் குடிநீர் வினியோகம் சீராகும் என்பதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜவகர்நகர், எழில்முக நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நடவடிக்கைஇங்கு, மழையின்போது வீடுகளில் தண்ணீர் புகுந்து, பகுதிமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதேபோல், குடிநீர் கிடைக்காமலும் சிரமப்பட்டனர்.அதே வார்டு, காந்திநகரில் இருந்து, குழாய் வழியாக ஜவகர்நகரில் உள்ள, 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் செல்கிறது.

இதற்காக, 2 கி.மீ., குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. மேல்நிலை தொட்டியில் இருந்து, தெரு பொது குழாய் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகளில் வினியோகிக்கும் குடிநீரை பகுதிமக்கள் பிடித்து பயன்படுத்துகின்றனர்.காந்தி நகரில் இருந்து, ஜெவகர் நகருக்கு பதிக்கப்பட்ட குழாய், இரண்டு மாதத்திற்கு முன் சேதம்அடைந்தது.இதை சரிசெய்ய, குடிநீர் வாரியம் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. பின், மழையை காரணம் காட்டி, 15 நாட்களுக்கு மேல் சரிசெய்யவில்லை. தெருக்களில் மழை நீர் வடிந்த நிலையில், நேற்று குழாய் சீரமைப்பு பணி நடந்தது.இரண்டு மாதங்களாக தடைபட்ட குடிநீர், மீண்டும் வினியோகம் செய்யப்பட உள்ளதால், பகுதிமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X