பொது செய்தி

தமிழ்நாடு

விடுதி மாணவர் மாயம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
திண்டிவனம் ; திண்டிவனத்தில் விடுதியில் தங்கி படித்த மாணவரை காணவில்லை என, வார்டன் போலீசில் புகார் அளித்துள்ளார்.திண்டிவனத்தில் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு ஆத்திப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அகஸ்டின் அஸ்பிக், 16, என்பவர் பிளஸ் 1 படித்து வந்தார்.கடந்த 22ம் தேதி

திண்டிவனம் ; திண்டிவனத்தில் விடுதியில் தங்கி படித்த மாணவரை காணவில்லை என, வார்டன் போலீசில் புகார் அளித்துள்ளார்.திண்டிவனத்தில் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இங்கு ஆத்திப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அகஸ்டின் அஸ்பிக், 16, என்பவர் பிளஸ் 1 படித்து வந்தார்.கடந்த 22ம் தேதி அகஸ்டின், தனது ஊருக்கு செல்வதாகக்கூறி வெளியே சென்றுள்ளார். அவரது மேஜையில் தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும், அதற்காக மாணவர்களையும், வார்டனையும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கடிதம் எழுதி விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.இது குறித்து விடுதி வார்டன் மேத்தேயு, திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாணவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X