பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலையொட்டி தி.மு.க., விருப்ப மனு வழங்கல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
திண்டிவனம் ; திண்டிவனம் நகராட்சியில் போட்டியிட விரும்பும் தி.மு.க., வினரிடமிருந்து விருப்பு மனு பெறும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் விரைவில் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திண்டிவனம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் போட்டியிட விரும்பும் தி.மு.க., வினரிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தி.மு.க., வினரிடமிருந்து தேர்தல்
 உள்ளாட்சி தேர்தலையொட்டி தி.மு.க., விருப்ப மனு வழங்கல்

திண்டிவனம் ; திண்டிவனம் நகராட்சியில் போட்டியிட விரும்பும் தி.மு.க., வினரிடமிருந்து விருப்பு மனு பெறும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் விரைவில் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி திண்டிவனம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் போட்டியிட விரும்பும் தி.மு.க., வினரிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தி.மு.க., வினரிடமிருந்து தேர்தல் பொறுப்பாளரான மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரமணன் விருப்ப மனுக்களை வழங்கினார். இதில் நகர பொருளாளர் கண்ணன், இலக்கிய அணி அமைப்பாளர் சின்னச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விருப்ப மனு கொடுப்பதற்கு வரும் 30ம் தேதி வரை அவகாசம் இருந்தாலும், நேற்று முன்னாள் கவுன்சிலர்கள் முரளிதரன், சின்னதுரை, சந்திரன், சாரங்கபாணி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X