சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை சீரமைப்பு பணியில் ஒப்பந்த நிறுவனம் மெத்தனம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், வி.பி.ஜி., அவென்யு பிரதான சாலை, 1 கி.மீ., நீளம் கொண்டது. இங்கு, 20க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க, கடந்த ஆண்டு மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. ௧௦ ஆண்டுகளுக்கு பின், சாலை சீரமைப்பு பணி நடந்தது. ஆனால், குடிநீர் குழாய் பதிக்க வேண்டி, 300
 சாலை சீரமைப்பு பணியில் ஒப்பந்த நிறுவனம் மெத்தனம்

சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், வி.பி.ஜி., அவென்யு பிரதான சாலை, 1 கி.மீ., நீளம் கொண்டது.

இங்கு, 20க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க, கடந்த ஆண்டு மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. ௧௦ ஆண்டுகளுக்கு பின், சாலை சீரமைப்பு பணி நடந்தது. ஆனால், குடிநீர் குழாய் பதிக்க வேண்டி, 300 மீட்டர் நீளத்தில் சாலையை சீரமைக்கவில்லை. மீதமுள்ள பகுதிகள் புதுப்பிக்கப்பட்டன.சீரமைக்காத பகுதி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், பள்ளம் விழுந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தடுமாறுகின்றனர். மழையில், சாலை மேலும் மோசமடைந்தது. மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், ஒப்பந்த நிறுவனம் காலதாமதம் செய்வதாக கூறுகின்றனர். அதிகாரிகள் தலையிட்டு, சாலையை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X