சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பாதை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி வேகம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ பாதைக்கு மேலும், 1.64 லட்சம் சதுர அடி நிலம் கையகப்படுத்தும் பணி வேகமெடுத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து, பல இடங்களில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இத்திட்டத்தில், மாதவரம் - சோழிங்க நல்லுார்

மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ பாதைக்கு மேலும், 1.64 லட்சம் சதுர அடி நிலம் கையகப்படுத்தும் பணி வேகமெடுத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது.

ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து, பல இடங்களில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இத்திட்டத்தில், மாதவரம் - சோழிங்க நல்லுார் இடையே, 47 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது. இப்பாதையில், மாதவரம் - சி.எம்.பி.டி., இடையே, பாதை பணிக்கு ஒப்பந்தாரர்கள் நியமிக்கப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் நடந்த வருகிறது. சி.எம்.பி.டி., - -சோழிங்கநல்லுார் இடையே சில இடங்களில் பாதை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன.இப்பாதையில், மாதவரம் - விருகம்பாக்கம் இடையே உள்ள நிலையங்களின் சாலை விரிவாக்கம் மற்றும், இணைப்பு சாலை பணிகளுக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இப்பாதையில் உள்ள காளியம்மன் கோவில் தெரு, அமைந்தகரை, விருகம்பாக்கம் ஆகிய இடங்களில், தனியாருக்கு சொந்தமான நிலங்கள், நிலைய வளாக விரிவாக்கம், சாலை, இணைப்பு சாலை விரிவாக்கத்துக்கும் கையகப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது.அந்த வகையில், 1.64 லட்சம் சதுர அடி நிலம் தேவைப்படுகிறது. இதற்காக நில உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலங்கள் கையகப்படுத்தும் பணி இரண்டு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- -நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X