பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயி வீட்டில்நகை, பணம் திருட்டு

Added : நவ 25, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.விழுப்புரம் அடுத்த சொர்ணாவூர் மேல்பாதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராதாகிருஷ்ணன், 41; விவசாயி. இவர், நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு, கடலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாய் வளர்மதியை பார்க்க சென்றார். திரும்பி வந்துபார்த்தபோது,

விழுப்புரம் : விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

விழுப்புரம் அடுத்த சொர்ணாவூர் மேல்பாதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராதாகிருஷ்ணன், 41; விவசாயி. இவர், நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு, கடலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாய் வளர்மதியை பார்க்க சென்றார். திரும்பி வந்துபார்த்தபோது, ராதாகிருஷ்ணனின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு சவரன் நகைகள், 600 கிராம் வெள்ளி காசு மற்றும் 12,000 ரூபாயை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X