ஆப்கனுக்கு கோதுமை அனுப்ப இந்தியாவுக்கு பாக்., அனுமதி

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
இஸ்லாமாபாத்-இந்தியா, 50 ஆயிரம் டன் கோதுமையை, ஆப்கனுக்கு பாக்., வழியாக அனுப்ப, அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தெற்காசிய நாடான ஆப்கனில், தலிபான் ஆட்சி அமைந்த பின், உணவுப் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் ஆப்கனுக்கு, 50 ஆயிரம் டன் கோதுமை மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்குவதாக இந்தியா அறிவித்தது. தற்போது,

இஸ்லாமாபாத்-இந்தியா, 50 ஆயிரம் டன் கோதுமையை, ஆப்கனுக்கு பாக்., வழியாக அனுப்ப, அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.



latest tamil news


தெற்காசிய நாடான ஆப்கனில், தலிபான் ஆட்சி அமைந்த பின், உணவுப் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் ஆப்கனுக்கு, 50 ஆயிரம் டன் கோதுமை மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்குவதாக இந்தியா அறிவித்தது. தற்போது, ஆப்கனில் இருந்து இந்தியாவுக்கு பாக்., வழியே பொருட்களை அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா பாக்., வழியே ஆப்கனுக்கு பொருட்கள் அனுப்ப அனுமதி இல்லை.

அதனால், ஆப்கன் மக்களுக்கு, பஞ்சாப் மாநிலம் வாகா எல்லை வழியே கோதுமை அனுப்ப அனுமதிக்குமாறு பாக்.,கை இந்தியா கேட்டுக் கொண்டது. அதுபோல, ஆப்கன் வெளியுறவு துறை அமைச்சர் அமிர் கான் முத்தகியும், இந்தியா பாக்., வழியே கோதுமை அனுப்ப அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.


latest tamil news


இந்நிலையில் நேற்று ''வாகா எல்லை வழியே ஆப்கனுக்கு கோதுமை அனுப்ப அனுமதிக்கப்படும்; இது குறித்த தகவல், இந்திய வெளியுறவு துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது'' என பாக்., பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்தியா விரைவில் கோதுமை மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை ஆப்கனுக்கு அனுப்பும் என, தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-நவ-202116:26:14 IST Report Abuse
SUBBU, MADURAI இந்தியாவுக்கு இது தேவையில்லாத வேலை.மூர்க்கனுகளுக்கு நாம் எவ்வளவுதான் நல்லது பண்ணாலும் அவிங்க மரபணுவில் பொதிந்துள்ள உள்ள துரோக மனப்பான்மை அவிங்கள விட்டு போகாது.இது இந்தியாவில் உள்ள தேச துரோக மூர்கன்களுக்கும் பொருந்தும்.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
25-நவ-202115:32:05 IST Report Abuse
SENTHIL NATHAN பதிலுக்கு அவனுங்க நம்ம பாதுகாப்பு வீரர்களை கொல்லுவானுங்க , நன்றிண்ணா என்னனு தெரியாத ஜன்மன்ஹா
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
25-நவ-202113:01:53 IST Report Abuse
R Ravikumar மனிதாபிமான உதவி தான் என்றாலும் .. நமக்கு இதனால் ஒரு லாபமும் இல்லை . article 370 and 15A காஷ்மிரில் நீக்கியது நமக்கு வெற்றி நம் பக்கம் என்றாலும் , ஆப்கானை இழந்தது நமக்கு தோல்விதான் . இந்த நாடகத்தின் முடிவு இறைவனுக்குத்தான் தெரியும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X