பா.ஜ.., ஆளாத மாநிலங்களுக்கு தொல்லை தருகிறார்கள்: சரத்பவார் குமுறல்

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
மும்பை: பா.ஜ.., ஆளாத மாநிலங்களில் புலனாய்வு அமைப்புகள் மூலம் தொல்லை தர வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய பா.ஜ.க., அரசு கடைப்பிடிக்கிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இவை உதாரணம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறினார்.மகாராஷ்டிராவில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார் இது பற்றி மேலும் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன் மகா விகாஸ்

மும்பை: பா.ஜ.., ஆளாத மாநிலங்களில் புலனாய்வு அமைப்புகள் மூலம் தொல்லை தர வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய பா.ஜ.க., அரசு கடைப்பிடிக்கிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இவை உதாரணம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறினார்.



latest tamil news


மகாராஷ்டிராவில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார் இது பற்றி மேலும் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன் மகா விகாஸ் அகாதி கூட்டணி அமைந்த போது 15 நாட்களில் ஆட்சி கவிழும் என்றார்கள் பா.ஜ.,வினர். தற்போதும் அதே ஜோதிடத்தை கூறுகிறார் பா.ஜ.., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல். இக்கூட்டணி தனது ஐந்தாண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும். இப்போது தேர்தல் நடந்தாலும் மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வரும்.


latest tamil news


மேற்கு வங்கத்தில் ஆறேழு அமைச்சர்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் தொந்தரவு செய்கின்றன. பா.ஜ.க., ஆளாத மாநிலங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினரை வைத்து தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பா.ஜ., எடுத்துள்ளது. அதையே இங்கேயும் அதை செய்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

உ.பி. மற்றும் பிற அண்டை மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த மாநிலங்களின் சில கிராமங்களுக்குச் சென்ற போது உள்ளூர் மக்களிடம் இருந்து வித்தியாசமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. வாக்கு கேட்டுச் சென்றாலும் இதே போன்று நடத்தப்படலாம் என கருதி அவர்கள் வேளாண் சட்டத்தை ரத்து செய்திருக்கிறார்கள். இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறாமல் இருந்திருந்தால் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்காது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
25-நவ-202120:09:57 IST Report Abuse
RajanRajan திருடன் இருக்கிற இடத்துலே தானே டார்ச் அடிச்சு பாப்பாங்க. எதோ ஊழலுக்கும் இவிங்களுக்கும் சம்பந்தமே இல்லீன்னு இப்பவும் ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-நவ-202118:37:10 IST Report Abuse
J.V. Iyer கொள்ளை அடிப்பதை கண்டுகொள்ளாமல், பிடிக்கிறார்கள். எனவே மோசம்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
25-நவ-202116:39:09 IST Report Abuse
DVRR அதாவது எப்படியாவது எதற்கெடுத்தாலும் ஒரு சப்பைக்கட்டு கட்டுவார்கள் இந்த ஊழலே உருவான அரசியல்வாதிகள் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது . பண்றது ஊழல் ஊழல் ஊழல் அனால் அதை யாரவது தட்டிக்கேட்டால் எங்களுக்கு எதிராக மத்திய அரசு என்று உளறுவது?? வருமானத்துறை 2 நாட்கள் முன்னால் நடந்த ரெய்டில் அந்த ரூ 1000 கோடி கொண்டு சென்றுவிட்டதா அது உன்னுடைய பணமா????ஓஹோ அதுக்குத்தான் இந்த உளறலா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X