பா.ஜ.க., ஆளாத மாநிலங்களுக்கு தொல்லை தருகிறார்கள்: சரத்பவார் குமுறல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
மும்பை: பா.ஜ.க., ஆளாத மாநிலங்களில் புலனாய்வு அமைப்புகள் மூலம் தொல்லை தர வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய பா.ஜ.க., அரசு கடைப்பிடிக்கிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இவை உதாரணம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறினார். மகாராஷ்டிராவில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார் இது பற்றி மேலும் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன் மகா விகாஸ் அகாதி

மும்பை: பா.ஜ.க., ஆளாத மாநிலங்களில் புலனாய்வு அமைப்புகள் மூலம் தொல்லை தர வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய பா.ஜ.க., அரசு கடைப்பிடிக்கிறது.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இவை உதாரணம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறினார்.

மகாராஷ்டிராவில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார் இது பற்றி மேலும் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன் மகா விகாஸ் அகாதி கூட்டணி அமைந்த போது 15 நாட்களில் ஆட்சி கவிழும் என்றார்கள் பா.ஜ.க.,வினர். தற்போதும் அதே ஜோதிடத்தை கூறுகிறார் பா.ஜ.க., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல். இக்கூட்டணி தனது ஐந்தாண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும். இப்போது தேர்தல் நடந்தாலும் மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வரும்.

மேற்கு வங்கத்தில் ஆறேழு அமைச்சர்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் தொந்தரவு செய்கின்றன. பா.ஜ.க., ஆளாத மாநிலங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினரை வைத்து தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பா.ஜ.க., எடுத்துள்ளது. அதையே இங்கேயும் அதை செய்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

உ.பி. மற்றும் பிற அண்டை மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த மாநிலங்களின் சில கிராமங்களுக்குச் சென்ற போது உள்ளூர் மக்களிடம் இருந்து வித்தியாசமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. வாக்கு கேட்டுச் சென்றாலும் இதே போன்று நடத்தப்படலாம் என கருதி அவர்கள் வேளாண் சட்டத்தை ரத்து செய்திருக்கிறார்கள்.

இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறாமல் இருந்திருந்தால் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்காது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X