சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரேன் மேதி இருவர் படுகாயம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
அண்ணாசதுக்கம் : ஸ்பென்சர் சிக்னலில், நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, கிரேன் மோதிய விபத்தில், இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அடையாறு, அருணாச்சலாபுரம், 1வது தெருவைச் சேர்ந்தவர் லலித் குமார், 34; சொந்த தொழில் செய்பவர். அவரது மனைவி சுனிதா, 29. நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி, ஸ்பென்சர்

அண்ணாசதுக்கம் : ஸ்பென்சர் சிக்னலில், நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, கிரேன் மோதிய விபத்தில், இருவர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அடையாறு, அருணாச்சலாபுரம், 1வது தெருவைச் சேர்ந்தவர் லலித் குமார், 34; சொந்த தொழில் செய்பவர். அவரது மனைவி சுனிதா, 29. நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி, ஸ்பென்சர் சிக்னலில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது பின்னே வந்த கிரேன், அவர்களின் வாகனத்தின் மீது மோதியது. இதில், காயமடைந்த தம்பதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு இருவரையும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கிரேன் ஓட்டுனர் சிவா, 33 என்பவரிடம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X