தமிழ்நாடு

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள் விரைவாக செயல்பட வேண்டும்; எம்.பி., கவுதமசிகாமணி அறிவுறுத்தல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடந்த மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.கூட்டத்திற்கு கண்காணிப்பு குழு தலைவர் கவுதமசிகாமணி எம்.பி., தலைமை தாங்கி பேசியதாவது;மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம்,
 அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள் விரைவாக செயல்பட வேண்டும்;   எம்.பி., கவுதமசிகாமணி அறிவுறுத்தல்


கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடந்த மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.கூட்டத்திற்கு கண்காணிப்பு குழு தலைவர் கவுதமசிகாமணி எம்.பி., தலைமை தாங்கி பேசியதாவது

;மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், பிரதான் மந்திரி குடியிருப்புத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், துாய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்; மாதிரி கிராமத் திட்டம், பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா, பிரதான் மந்திரி குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம், தீனதயாள் உபத்யாயா கிராம ஜோதி யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையில் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் இலக்குகளை மேற்கொள்ள துறை தலைவர்கள் விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.மக்கள் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்படும் திட்டங்களை, துறை அலுவலர்கள் முக்கியத்துவம் அளித்து உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் பொறுப்புடன் விரைவாக செயல்பட்டு மாவட்ட வளர்ச்சிக்கு பங்காற்றிட வேண்டும். இவ்வாறு எம்.பி., பேசினார்.கூட்டத்தில் உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஷ்வரி, டி.ஆர்.ஓ., விஜய்பாபு, திட்ட இயக்குநர்கள் மணி, தேவநாதன் மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X