விபத்தை தடுக்க தடுப்பு அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தை தடுக்க தடுப்பு அமைப்பு

Added : நவ 25, 2021
Share
சிந்தாதிரிப்பேட்டை ; நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, மழை நீரை வெளியேற்ற உடைக்கப்பட்ட பள்ளத்தை சுற்றி, விபத்து ஏற்படாத வகையில் தடுப்பு கள் அமைக்கப் பட்டு உள்ளன.சென்னையில், வடகிழக்கு பருவ மழையால் பெரும்பாலான பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடியவில்லை. அவற்றை வெளியேற்ற, சில இடங்களில் வடிகாலை உடைத்து, மழை நீர் வெளியேற்றப்பட்டது.அவ்வாறு உடைக்கப்பட்ட பகுதியைச்

சிந்தாதிரிப்பேட்டை ; நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, மழை நீரை வெளியேற்ற உடைக்கப்பட்ட பள்ளத்தை சுற்றி, விபத்து ஏற்படாத வகையில் தடுப்பு கள் அமைக்கப் பட்டு உள்ளன.சென்னையில், வடகிழக்கு பருவ மழையால் பெரும்பாலான பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடியவில்லை.

அவற்றை வெளியேற்ற, சில இடங்களில் வடிகாலை உடைத்து, மழை நீர் வெளியேற்றப்பட்டது.அவ்வாறு உடைக்கப்பட்ட பகுதியைச் சுற்றி, தடுப்புகள் ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால், சாலையில் விளையாடும் சிறுவர்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் செல்வோரும் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவியது.ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில், சிங்கன்ன செட்டி தெரு,- மேற்கு கூவம் சாலை சந்திப்பில் மழை நீர் வடிகால் உடைக்கப்பட்டு, கட்டுமான கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கின்றன

.உடைக்கப்பட்ட பகுதியைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்படாததால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது.இது குறித்து நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி சமீபத்தில் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது விபத்து ஏற்படாத வகையில், பள்ளத்தைச் சுற்றி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X