பொது செய்தி

தமிழ்நாடு

வடிகால் இணைப்பு பணி தீவிரம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
தி.நகர், ; வெள்ள பாதிப்பை அடுத்து, தி.நகர் பிரதான சாலைகளில் வடிகால் இணைக்கும் பணியை, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.வடகிழக்கு பருவ மழையின்போது, சென்னையில் பல பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடியவில்லை. குறிப்பாக, தி.நகர் பகுதிக்கு உட்பட்ட ஜி.என்.செட்டி சாலை, பசுல்லா சாலை, திருமலைபிள்ளை சாலை, தியாகராயா சாலை, தெற்கு- வடக்கு போக் சாலை என, பல

தி.நகர், ; வெள்ள பாதிப்பை அடுத்து, தி.நகர் பிரதான சாலைகளில் வடிகால் இணைக்கும் பணியை, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவ மழையின்போது, சென்னையில் பல பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடியவில்லை. குறிப்பாக, தி.நகர் பகுதிக்கு உட்பட்ட ஜி.என்.செட்டி சாலை, பசுல்லா சாலை, திருமலைபிள்ளை சாலை, தியாகராயா சாலை, தெற்கு- வடக்கு போக் சாலை என, பல சாலைகளில் தேங்கிய மழை நீர், ஐந்து நாட்களுக்கு மேலாகியும் வடியவில்லை.சம்பவ இடத்தில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். பிரதான

சாலைகளில் வடிகால் முறையாக இணைக்கப்படாததே, மழை நீர் வடியாததற்கு காரணம் என தெரியவந்தது.தொடர்ந்து மழை நீர் வடிகால் துறை அதிகாரிகளை அழைத்த மாநகராட்சி கமிஷனர், போர்க்கால அடிப்படையில் வடிகால் இணைக்கும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.அதன்படி, தி.நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வடிகால் இணைக்கும் பணியை, மாநகராட்சி மழைநீர் வடிகால் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X