பொது செய்தி

தமிழ்நாடு

மத்தியக் குழுவிடம் எம்.எல்.ஏ., மனு

Added : நவ 25, 2021
Share
Advertisement
கடலுார், : ள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அய்யப்பன் எம்.எல்.ஏ., மனு அளித்துள்ளார். கடலுார் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பை பார்வையிட மத்தியக்குழுவினரிடம் அய்யப்பன் எம்.எல்.ஏ., அளித்த மனு: தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, மலட்டாறு ஆகிய ஆறுகள் கடலில் சங்கமிக்கும் பகுதியாக கடலுார் தொகுதி உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றில்
 மத்தியக் குழுவிடம் எம்.எல்.ஏ., மனு

கடலுார், : ள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அய்யப்பன் எம்.எல்.ஏ., மனு அளித்துள்ளார். கடலுார் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பை பார்வையிட மத்தியக்குழுவினரிடம் அய்யப்பன் எம்.எல்.ஏ., அளித்த மனு:

தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, மலட்டாறு ஆகிய ஆறுகள் கடலில் சங்கமிக்கும் பகுதியாக கடலுார் தொகுதி உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு கரையோர பகுதிகளில் கால் நடைகள், விளை நிலங்கள் பாதித்தன. பல வீடுகள் தண்ணீரில் மூழ்கின. பாலங்கள், சாலைகள், வாய்க்கால்கள், கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

எனவே, கடலுாரில் கடலில் கலக்கும் தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, மலட்டாறுகளின் இரு கரைகளையும் பலப்படுத்த வேண்டும். வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். தேவையான இடங்களில் சிறுபாலங்கள், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் அமைத்து நிலையான கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். கடலுார் தொகுதி முழுதும் சேதமடைந்துள்ள நகரம் மற்றும் கிராமப்புற சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கும் கடலுார் தொகுதிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X