தமிழ்நாடு

ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை துவக்கம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
வண்ணாரப்பேட்டை : சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், தமிழக அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை, 2.15 கோடி ரூபாய் மதிப்பில் அமைத்துள்ளது.இதை, மக்கள் நல்வாழ்வுத் துறை
 ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை துவக்கம்

வண்ணாரப்பேட்டை : சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், தமிழக அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை, 2.15 கோடி ரூபாய் மதிப்பில் அமைத்துள்ளது.இதை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்சுப்பிரமணியன் நேற்று துவங்கி வைத்தார்.பின் அவர் பேசியதாவது:கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல்பரவியபோது, அரசுடன் மக்கள் சேவையில்ஈடுபட தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி பல தனியார் நிறுவனங்கள் அரசுடன் கைகோர்த்தன. அதன் ஒரு பகுதியாக தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் 2.15 கோடி ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக 100 நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். தமிழகத்தில் தனியார் மருத்துவமனையில் பெரிய அளவில் தடுப்பூசி கையிருப்பு இல்லை.அங்கு, கோவாக்சின் - 800 ரூபாய்க்கும்; கோவிஷீல்டு - 1,410 ரூபாய்க்கும்; ஸ்பூட்னி 1,210 ரூபாய் கட்டணத்திலும் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

பணம் செலுத்தி தடுப்பூசி போட வேண்டும் என்பதால், தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.நவம்பர் மாதம் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கோடு பயணித்து வருகிறோம். வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'மெகா' தடுப்பூசி முகாம் நடைபெறும்.தமிழகத்தில் 'டெங்கு'வுக்கு இதுவரை 4,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 516 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X