பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் பள்ளி, கல்லுாரி கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லுாரி வளாகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என எம்..ஜி.ஆர்., அரசு கலைக் கல்லுாரி முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு
 மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் பள்ளி, கல்லுாரி கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லுாரி வளாகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என எம்..ஜி.ஆர்., அரசு கலைக் கல்லுாரி முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு தலைவர் பிரசன்னா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை கோரி கோஷம் எழுப்பினர்.இதில் சங்க நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் குமரவேல், மனோ, மணிகண்டன், அருண் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.கிள்ளைசிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர்.பின் கல்லுாரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் அனைவரும் கலைந்துச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X