சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருசக்கர வாகன திருடன் கைது: மூன்று பைக்குகள் பறிமுதல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் ஸ்ரீஅய்யனார் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருசக்கர வாகன திருடனை போலீசார் கைது செய்தனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் ஸ்ரீஅய்யனார் கோவிலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை
 இருசக்கர வாகன திருடன் கைது: மூன்று பைக்குகள் பறிமுதல்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் ஸ்ரீஅய்யனார் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருசக்கர வாகன திருடனை போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் ஸ்ரீஅய்யனார் கோவிலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சேத்தியாதோப்பு குறுக்குரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் , மேலும் அவரிடம் விசாரித்ததில் அவர் நாகை மாவட்டம், சீர்காழி கோவிந்தராஜ நகரைச் சேர்ந்த ஜாபர்அலி மகன் முகமது ரியாஸ்,24; என்பதும், இவர் கோவில் உண்டியலை உடைத்து 500 ரூபாய் திருடியது தெரியவந்தது. மேலும், நாகை, மயிலாடுதுறை, திருவாருர், திருச்சி ஆகிய இடங்களில் இருசக்கர வானங்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.சேத்தியாத்தோப்பு போலீசார் முகமது ரியாஸை கைது செய்து 300 ரூபாய் மற்றும் டி.என்55 9343, டி.என் 46, 6851, பிஒய், 01 சிசி 5458 என்ற மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X