வாகன நிறுத்தமான இணைப்பு சாலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாகன நிறுத்தமான இணைப்பு சாலை

Added : நவ 25, 2021
Share
நெசப்பாக்கம் பிரதான சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை குறுகலாக இருப்பதால், இருவழி போக்குவரத்தில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தன.இதற்கு தீர்வு காண, நெசப்பாக்கம், அண்ணா பிரதான சாலை மற்றும் ஏரிக்கரை சாலையை இணைக்கும் வகையில், 300 மீட்டர் நீளத்திற்கும், 60 அடி அகலத்திற்கும், 2.51 கோடி ரூபாய் செலவில் புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.தற்போது, இந்த

நெசப்பாக்கம் பிரதான சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை குறுகலாக இருப்பதால், இருவழி போக்குவரத்தில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தன.

இதற்கு தீர்வு காண, நெசப்பாக்கம், அண்ணா பிரதான சாலை மற்றும் ஏரிக்கரை சாலையை இணைக்கும் வகையில், 300 மீட்டர் நீளத்திற்கும், 60 அடி அகலத்திற்கும், 2.51 கோடி ரூபாய் செலவில் புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.தற்போது, இந்த இணைப்பு சாலையின் இருபுறங்கள் மற்றும் நடைபாதையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, இலவச 'பார்க்கிங்' ஆக பயன்படுத்துகின்றனர். இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.எனவே இணைப்பு சாலையில் உள்ள வாகன ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X