பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு நாட்களுக்கு பின் பள்ளி மாணவர் உடல் மீட்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
வேப்பூர் : வேப்பூர் அருகே மணிமுக்தா ஆற்றில் குளிக்க குதித்த பள்ளி மாணவரின் உடல் 2 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது.வேப்பூர் அடுத்த நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் மகன் சூர்யா, 13, அவரது நண்பர் சக்திவேல் மகன் பிரதீப், 13. இருவரும், கடந்த 22ம் தேதி நல்லுார் வில்வனேஸ்வரர் கோவில் அருகேயுள்ள மணிமுக்தாற்றில் குளிக்க குதித்தனர். நீச்சல் தெரியாததால்

வேப்பூர் : வேப்பூர் அருகே மணிமுக்தா ஆற்றில் குளிக்க குதித்த பள்ளி மாணவரின் உடல் 2 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது.வேப்பூர் அடுத்த நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் மகன் சூர்யா, 13, அவரது நண்பர் சக்திவேல் மகன் பிரதீப், 13. இருவரும்,

கடந்த 22ம் தேதி நல்லுார் வில்வனேஸ்வரர் கோவில் அருகேயுள்ள மணிமுக்தாற்றில் குளிக்க குதித்தனர். நீச்சல் தெரியாததால் தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டனர்.அதில், கரையோரம் இருந்த கருவேலமரத்தை பிடித்து பிரதீப் கூச்சலிட்டதால் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

சூர்யாவை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று பகல் 2:00 மணியளவில் விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் அருகே, மணிமுக்தா ஆற்றின் கரையோரத்தில் சூர்யாவின் பிரேதத்தை கண்டு பிடித்து மீட்டனர். புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X