தமிழ்நாடு

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கைகள்... நிறைவேற்றப்படுமா; மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வேண்டும்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பெண்ணையாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிலத்தை இலவசமாக சமன் செய்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.தொடர் மழை காரணமாக கடலுார் மாவட்டத்தில் உள்ள பெண்ணையாறு, கெடிலம், மணிமுக்தா, பரவனாறு உள்ளிட்ட ஆறுகளில் உபரி நீர் திறந்துவிட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் தென்பெண்ணையாற்றில் 1.50 லட்சம் கன அடி
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கைகள்... நிறைவேற்றப்படுமா;    மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வேண்டும்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பெண்ணையாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிலத்தை இலவசமாக சமன் செய்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக கடலுார் மாவட்டத்தில் உள்ள பெண்ணையாறு, கெடிலம், மணிமுக்தா, பரவனாறு உள்ளிட்ட ஆறுகளில் உபரி நீர் திறந்துவிட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் தென்பெண்ணையாற்றில் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களான விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், பண்ருட்டி அருகில் உள்ள எனதிரிமங்கலம், மேல்குமாரமங்கலம், மேல்பட்டாம்பாக்கம், நத்தப்பட்டு, அழகியநத்தம், உப்பலவாடி, நாணமேடு, உச்சிமேடு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்டது.

இதில் வீடுகளில் தண்ணீர் புகுந்த பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 15 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. வீடுகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை.வருமானம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். பணம் செலுத்த முடியாத வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

பல கிராமங்களில் தண்ணீரின் வேகத்தால் மணற்பகுதியான விவசாய நிலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு யாணை பிடிக்கும் பள்ளங்களாக மாறியுள்ளன.இன்னும் சில இடங்களில் மண் அரிப்பினால் மண் பெயர்ந்து பயிர்களின் மேல் மேடாக்கி விட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் மண்ணுக்குள் சிக்கி அழுகிவிட்டன. கடந்த 72ம் ஆண்டு பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, இதேபோன்று விவசாய நிலங்கள் பள்ளம் மேடுகளாக மாறின.அப்போதைய தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் இலவசமாக புல்டோசர் உதவியால் சமன் செய்து கொடுத்தனர்.

அதேபோன்று தற்போது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வேளாண்மை பொறியியல் துறை மூலமாக இலவசமாக சமன்செய்து தர வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், பயிர் பாதிப்பு குறித்து நிவாரண உதவி வழங்குவதற்காக இதுவரை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. உடனடியாக முறையான கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்.

பயிர் இன்ஸ்சூரன்ஸ் செய்வதற்கு அவகாசம் வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்ஸ்சூரன்ஸ் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X