பொது செய்தி

தமிழ்நாடு

வணிகவரித்துறையினர் விடுப்பு போராட்டம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் வணிக வரித்துறை அலுவலக பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.வணிகவரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், வணிகவரித் துறை அலுவலர்களின் இடமாறுதல் ஆணையை திரும்ப பெற வேண்டும். பணியிடங்கள் குறைக்கப்படாமல் வணிக வரித்துறை மறு சீரமைப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,.அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க
 வணிகவரித்துறையினர் விடுப்பு போராட்டம்

கடலுார் : கடலுார் வணிக வரித்துறை அலுவலக பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.வணிகவரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், வணிகவரித் துறை அலுவலர்களின் இடமாறுதல் ஆணையை திரும்ப பெற வேண்டும்.

பணியிடங்கள் குறைக்கப்படாமல் வணிக வரித்துறை மறு சீரமைப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,.அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நேற்று வணிகவரித்துறை பணியாளர்கள் ஓட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர்.அதன்படி கடலுாரில் வணிகவரித்துறை அலுவலகத்திற்கு பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வழக்கமான பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X