பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு.

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி யில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.அதன்பின், செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது:மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடக்கஉள்ள சர்வதேச வர்த்தக மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன்.திரிபுராவில் நடந்த வன்முறையில், பா.ஜ., தொண்டர்களால் திரிணமுல் காங்., தொண்டர்கள்

புதுடில்லி-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி யில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.latest tamil news


அதன்பின், செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது:மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடக்கஉள்ள சர்வதேச வர்த்தக மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன்.திரிபுராவில் நடந்த வன்முறையில், பா.ஜ., தொண்டர்களால் திரிணமுல் காங்., தொண்டர்கள் தாக்கப்பட்டது குறித்து முறையிட்டேன்.மேற்கு வங்கத்தில் எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தினேன்.நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பு குலைக்கப்படக் கூடாது என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்

.உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எங்கள் உதவி தேவைப்பட்டால் செய்ய தயார். வரும் 30ம் தேதி, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை மும்பையில் சந்திக்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news'அரசியலில் அரிய குணம்!'

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி நேற்று டில்லியில் சந்தித்து பேசினார்.இது குறித்து சாமி கூறியதாவது:நான் சந்தித்த, இணைந்து பணியாற்றிய தலைவர்களில் ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், ராஜிவ், சந்திரசேகர், நரசிம்ம ராவ் போன்ற சிலர் மட்டுமே சொன்னதை செய்யும்; செய்வதை சொல்லும் குணம் உடையவர்களாக இருந்தனர்.

அந்த வரிசையில் மம்தாவும் இடம் பெற்றுள்ளார். இந்திய அரசியலில் இது மிக அரிய குணம்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, 'திரிணமுல் காங்.,கில் இணைவீர்களா?' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''நான் ஏற்கனவே அவருடன் தான் இருக்கிறேன்,'' என பதில் அளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
25-நவ-202118:55:09 IST Report Abuse
sankar "எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தினேன்"- ராணுவத்தை கண்டு இவருக்கே ஒரே உதறல்தான்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-நவ-202116:19:10 IST Report Abuse
sankaseshan TMC volunteers attacked by BJP There is limit for lying . Whenever BJP leaders visited your goodness attacked them with weapons. Her aim of visiting Delhi is to meet political leaders to trouble to centre and unite antinational forces . Her request o withdraw BSF is to enhance entry of Bangladesh Bangladeshis . Swannakkaa is more dangerous than. Mebooba and Farooq Abdullah
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
25-நவ-202110:41:22 IST Report Abuse
vbs manian நல்ல நகைசுவை. நிதி மாதிரி பதவி கிடைக்காத ஆதங்கம் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது. எதற்கு இவர் இன்னும் பி ஜெ பி யில் இருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X