அண்ணாமலை பல்கலை.,யில் புதிய துணைவேந்தராக கதிரேசன் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலை.,யில் புதிய துணைவேந்தராக கதிரேசன்

Added : நவ 25, 2021
Share
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கதிரேசன் நேற்று பொறுப்பேற்றார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றிய முருகேசன் கடந்த ஜூன் 2ம் தேதி ஓய்வு பெற்றார்.அதையடுத்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை துணைவேந்தராக, அறிவியல் ஆராய்ச்சியில் நீண்ட அனுபவம் பெற்ற கதிரேசனை தமிழக கவர்னர் ரவி நியமித்துள்ளார்.
 அண்ணாமலை பல்கலை.,யில்  புதிய துணைவேந்தராக  கதிரேசன்

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கதிரேசன் நேற்று பொறுப்பேற்றார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றிய முருகேசன் கடந்த ஜூன் 2ம் தேதி ஓய்வு பெற்றார்.

அதையடுத்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை துணைவேந்தராக, அறிவியல் ஆராய்ச்சியில் நீண்ட அனுபவம் பெற்ற கதிரேசனை தமிழக கவர்னர் ரவி நியமித்துள்ளார். துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கதிரேசன் நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், மூன்று ஆண்டுகள் பொறுப்பு வகிப்பார்.

பல்கலைக்கழகத்தை 2013ல் அரசு ஏற்ற பிறகு, மூன்றாவது துணைவேந்தர் கதிரேசன் ஆவர்.புதிய துணைவேந்தருக்கு பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வநாராயணன், தொலைதுார கல்வி இயக்கக இயக்குனர் சிங்காரவேல், பி.ஆர்.ஓ., சம்பத் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.முன்னதாக துணைவேந்தர் கதிரேசன் பல்கலைக் கழக நிறுவனர் அண்ணாமலை செட்டியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X