பொது செய்தி

தமிழ்நாடு

பெண் சாவில் சந்தேகம்: தாய் மாமன் புகார்

Added : நவ 25, 2021
Share
Advertisement
குள்ளஞ்சாவடி : உறவினர் பெண் சாவில் சந்தேகம் உள்ளதாக தாய்மாமன் போலீசில் புகார் செய்துள்ளார்.குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு பூவாணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர், மணிகண்டன். இவரது மனைவி ஸ்டெல்லா மேரி, 28. இவர்களுக்கு 11 வயதில் மகள் உள்ளார். மணிகண்டன் கரும்பு வெட்டும் பணிக்காக ஆந்திரா சென்றுள்ளார். வீட்டில் ஸ்டெல்லா, மாமியார் மற்றும் குடும்பத்தினர் வசித்து

குள்ளஞ்சாவடி : உறவினர் பெண் சாவில் சந்தேகம் உள்ளதாக தாய்மாமன் போலீசில் புகார் செய்துள்ளார்.குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு பூவாணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர், மணிகண்டன். இவரது மனைவி ஸ்டெல்லா மேரி, 28. இவர்களுக்கு 11 வயதில் மகள் உள்ளார்.

மணிகண்டன் கரும்பு வெட்டும் பணிக்காக ஆந்திரா சென்றுள்ளார். வீட்டில் ஸ்டெல்லா, மாமியார் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் ஸ்டெல்லாவிற்கும், மணிகண்டனின் சித்திக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஸ்டெல்லா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மணிகண்டன் குடும்பத்தினர் சடலத்தை அடக்கம் செய்ய தயாராகி வந்தனர்.

இந்நிலையில் ஸ்டெல்லாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக புதுச்சேரி, தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்த அவரது தாய்மாமன், இருசப்பன், 51, போலீசாரிடம் புகார் செய்தார்.குள்ளஞ்சாவடி போலீசார் சடலத்தை கைப்பற்றி கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X