சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் வெட்டும் தொழிலாளி சாவு இழப்பீடு கேட்டு உறவினர்கள் பிரச்னை

Added : நவ 25, 2021
Share
Advertisement
கடலுார், : கல்வி அலுவலகத்தில் கீழே விழுந்து இறந்த மரம் வெட்டும் தொழிலாளியின் உறவினர்கள், இழப்பீடு கேட்டு பிரேத பரிசோதனை செய்ய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் புதுக்குப்பம் எஸ்.ஆர்.காலனியை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் மூர்த்தி, 38; மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். நேற்று காலை கடலுார் முதன்மை கல்வி அலுவலக

கடலுார், : கல்வி அலுவலகத்தில் கீழே விழுந்து இறந்த மரம் வெட்டும் தொழிலாளியின் உறவினர்கள், இழப்பீடு கேட்டு பிரேத பரிசோதனை செய்ய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் புதுக்குப்பம் எஸ்.ஆர்.காலனியை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் மூர்த்தி, 38; மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். நேற்று காலை கடலுார் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் மரம் வெட்டும் பணியில் மூர்த்தி ஈடுபட்டார்.அப்போது மரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்..
கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய விடாமல் உறவினர்கள் தடுத்தனர். இறந்த மூர்த்தியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வரவில்லை. இதனால் பிரேத பரிசோதனை செய்ய வந்த டாக்டர்கள் திரும்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X