தமிழ்நாடு

வீணாக கடலில் கலந்த 40 டி.எம்.சி., தண்ணீர்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கடலுார் : தென்பெண்ணை, கெடிலம் வழியாக பெருக்கெடுத்த வெள்ளத்தால், கடந்த 1 ம் தேதி முதல் 40 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.வடகிழக்கு பருவ மழை கடந்த மாத இறுதியில் துவங்கி பெய்து வருகிறது. இதனால் கெடிலம் மற்றும் தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்துவருவதால், இரு ஆறுகளிலும் அதிக அளவில் தண்ணீர் வருகிறது. கடந்த 19 ம் தேதி தென்பெண்ணை ஆற்றில் 1.50 லட்சம் கன அடி

கடலுார் : தென்பெண்ணை, கெடிலம் வழியாக பெருக்கெடுத்த வெள்ளத்தால், கடந்த 1 ம் தேதி முதல் 40 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை கடந்த மாத இறுதியில் துவங்கி பெய்து வருகிறது. இதனால் கெடிலம் மற்றும் தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்துவருவதால், இரு ஆறுகளிலும் அதிக அளவில் தண்ணீர் வருகிறது. கடந்த 19 ம் தேதி தென்பெண்ணை ஆற்றில் 1.50 லட்சம் கன அடி தண்ணீரும், கெடிலத்தில் 80 ஆயிரம் கன அடி தண்ணீரும் சென்றது.

இப்படியாக கடந்த 1ம் தேதி முதல் இரு ஆறுகள் வழியாக வரும் தண்ணீர் வீணாக கடலுார் அருகே வங்கக்கடலில் கலந்து வருகிறது.இதுவரையில், தென்பெண்ணை வழியாக 30 டி.எம்.சி.,யும், கெடிலம் வழியாக 10 டி.எம்.சி., தண்ணீரும் கடலில் கலந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X